இரத்தினக்கல் தொழில்துறையினர் எதிர்கொண்டிருக்கும் வரி தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் என்ற வகையில் வரி தொடர்பில் பேசும் இயலுமை ஜனாதிபதியிடமே உள்ளது. இத்துறையின் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வெளிநாட்டு வருமானத்தை ஈட்டும் பிரதான துறையாக மாற்றியமைப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. சிலர் ஜனாதிபதியாகும் கனவில் “சூட்” தைத்துள்ளனர். ஆனால் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் இயலுமை அவர்களுக்கு இல்லை. ஜனாதிபதியால் மாத்திரமே அதற்குரிய தீர்வுகளை வழங்க முடியும்.
முன்பு இந்த நாடு இருந்த நிலையை அனைவரும் அறிவர். அன்று டீசல் இருக்கவில்லை. மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்றனர். அந்த நிலைக்கு ஜனாதிபதியே முற்றுப்புள்ளி வைத்தார். நாடு நல்ல நிலைமைக்கு வந்த பின்பே நாட்டை நாம் மீளக் கையளிப்போம் என்று இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
.jpg)




