(கல்லடி செய்தியாளர்)கல்லடி- உப்போடை சிவாநந்த பழைய மாணவர்
சங்க தலைவர் வ. வாசுதேவனின் வேண்டுகோளுக்கிணங்க இலண்டனில் வசிக்கும்
புவனசிங்கம் வசீகரன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலை கிரிக்கெட்டை
வளர்க்கும் முகமாக இன்று புதன்கிழமை (17) சிவானந்தா பாடசாலைக்கு 450,000
ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சிவானந்தா தேசிய பாடசாலை
அதிபர் எஸ்.தயாபரன்,
பிரதி அதிபர் எஸ்.மதிமோகன்
உதவி அதிபர் எஸ். மணிவண்ணன்,
உடல் கல்வி ஆசிரியர் - ஆர்.தினேஷ்
புவனசிங்கம் வசீகரனின் பிரதிநிதியாக வீ . வசந்தமோகன்,
பாடசாலை ஆசிரியர் ஜீ.சதீஷ்காந்த,
பழைய மாணவர் சங்க செயலாளர் ஜெ. சாயிராஜன்,
விளையாட்டு இணைப்பு செயலாளரும் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளருமான தி. டிஷாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.