மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை காரணமாக தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன











(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது, எனவே பிரதான கால்வாய்கள், ஆறுகள், மற்றும் தாழ்நில பிரதேசங்களில் உள்ள மற்றும் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இதன்போது க.பொ.த (உயர்தரப் தரப்) பரீட்சை எழுதும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் பரீட்சை நிலையங்களுக்குச் சென்றதைக் காண முடிந்தது.

இதன்போது கிரான் பிரதேச செயலாளர் பிரிவு (KPS) - புலிபாஞ்சகல் கோஸ்வே மற்றும் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு போக்குவரத்து பாதிப்பு - படகுசேவைகள் இரண்டு மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு (EP) - ஈரலக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சித்தாண்டி தொடக்கம் பெருமாவெளி போக்குவரத்து பாதிப்பு - இரு படகுசேவைகள்  மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுப்புக்கப்பட்டுள்ளது.

வாகரை (KPN) - ஆற்று வெள்ளம் காரணமாக கல்லரிப்பு பிரதேச போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இம்மக்களின் போக்குவரத்துக்காக உழவு இயந்திர சேவை மற்றும் படகுசேவை  மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.