"உண்மையான நிகழ்நிலை பாதுகாப்பிற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எனவே சிறுவர் ஆபாச மற்றும் பிற தீவிரமான ஒன்லைன் குற்றங்கள் போன்ற பிரச்சனைகளை முக்கிய தளங்களின் ஒத்துழைப்புடன் நாங்கள் அறிமுகப்படுத்துவோம்.
இது இலங்கை சமூகத்தின் நல்வாழ்வுக்கு முக்கியமானது. அவசர முடிவுகளை விட
பயனுள்ள தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிப்போம்.” என்று ஐக்கிய மக்கள்
சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்
ஹர்ஷ டி சில்வா கூறினார்.
மேட்டா, கூகுள் மற்றும் யூடியூப் போன்ற முக்கிய தளங்களுடனான எங்கள் உறவுகளை நாங்கள் பாதிக்க மாட்டோம். அவை பொருளாதார வளர்ச்சிக்கு மிக அவசியமானவை" என அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.





