வடக்கில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை விட மிகப்பெரிய ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வமத தலைவர்களுடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன் இந்த ஆலயம் அமைக்கும் திட்டத்தில் அதிபராகிய நான் தலையிடமாட்டேன் எனவும் வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் எவரும் தலையிடமாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





