டெங்கு நுளம்பின் தாக்கத்திலிருந்து பாதுகாத்தல்.

 










டெங்கு நுளம்பின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி கிழக்கு கோறளைப்பற்று மத்தி ஆகிய பகுதிகளில் உள்ள பொது இடங்கள் சமுர்த்தி பயனாளிகளால் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், உதவி முகாமையாளர் ஏ.எம்.ஆரிப், பிரிவு உத்தியோகத்தர்கள் என்.எம்.எச்.முஹமட்
சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். ஜயூப்கான், வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர், வங்கி பணிக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரச அலுவலகங்களில் உள்ள சுற்றுச்சூழலில் டெங்கு நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், அவற்றின் வதிவிடத்தை முற்றுமுழுதாக இல்லாதொழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பவற்றை கருத்திற்கொண்டே இந்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.