இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை உடைய தாய்மார்கள் வெளிநாடு செல்வதற்கு தடை வருகிறது

 


இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெண்கள் நாட்டிற்குள் விட்டு வெளிநாடு செல்வதை தடுக்கவும் பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கவும் புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிறு குழந்தைகளை உடைய தாய்மார்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது சிறுவர் வன்புணர்வுகளுக்கு காரணம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.