(கல்லடி செய்தியாளர்)
உழவர் திருநாளை சிறப்பிக்கும் விசேட தைத்திருநாள் விழா கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (15) இடம் பெற்றது.
சங்கே
முழங்கு சமூக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் பொ.டிமலேஸ்வரன் தலைமையில்
இடம் பெற்ற இந் நிகழ்வில், ஆன்மீக அதிதியாக கொக்கட்டிச் சொலை
தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.க.சச்சிதானந்த குருக்களும்,
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
திருமதி.ஜே.ஜே.முரளிதரனும் கலந்து சிறப்பித்தனர்.
தமிழர் போற்றும்
தைத்திருநாள் நிகழ்வில் வில்லுப்பாட்டு, பக்தி நடனம், குருத்துப்
பின்னுதல், கிராமியப் பாடல்கள், சிறப்புப் பட்டிமன்றம் போன்ற கலை, கலாசார,
பண்பாட்டு நிகழ்வுகள் இதன் போது இடம் பெற்றது.
இந் நிகழ்வில்
சிறப்பு அதிதிகளாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மண்முனை மேற்கு
பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி, கலாநிதி முருகு தயாநிதி எனப்
பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் தமிழர்களின் பண்பாட்டைப்
பிரதிபளிக்கும் பாரம்பரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன்,
இப்பிரதேசத்தில் கல்வியில் தேசிய மட்டத்தில் பெறுபேறுகளைப் பெற்று
பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள், பதக்கம்
மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


.jpeg)




