மட்டக்களப்பில் தைப்பொங்கல் விமர்சியாகக் கொண்டாடப்பட்டது!











































(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் இன்று திங்கட்கிழமை (15) விமர்சியாகக் கொண்டாடப்பட்டது.

தமிழர்கள் வரிச்சுமை நாட்டில் தலைவிரித்தாடுகின்ற நிலையில் தம்மீது சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தைப்பொங்கலை "பொங்கலோ பொங்கல்" சொல்லி புதுப்பானையில் பொங்கி உறவுகளுக்குக் கொடுத்து உண்டு மகிழ்கின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம், அரசடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயம், மட்டக்களப்பு நகரிலுள்ள தமிழ் வர்த்தக நிலையங்களில் பொங்கல் பொங்கி வழிபாடு செய்வதைக் காணமுடிந்தது.

அத்தோடு தமிழர் பிரதேசங்களிலுள்ள பொது அமைப்புக்களும் உழவர் திருநாளைப் பொங்கி கொண்டாடியதை கண்ணாரக் காண முடிந்தது.