9 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் இருவரை வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் சிறுமிகளின் தாயுடன் தொடர்பை வைத்திருந்தவரான 44 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கலேவெல, பண்டாரகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தற்போது களுத்துறை, நாகொட, கல்லஸ்ஸ, நமல்கம பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச் சிறுமிகளின் தந்தை சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தாயையும் பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றதாகவும் அதன் பின்னர் தாய் சந்தேக நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.





