மீண்டும் வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த 05 கைதிகள் தப்பி ஓட்டம்

 


வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த 05 கைதிகள் நேற்றிரவு தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்களில் இருவர் புலஸ்திபுர காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை சுங்கவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.