சாக்ரமெண்டோ தமிழ் மன்ற கலிபோர்னியா நிதி பங்களிப்புடனும் அன்பு நெறியின் ஒருங்கிணைப்புடனும் சிவாநந்த பழைய மாணவர் சங்கத்தினால் நடைமுறைப்படுத்தபட்ட வெள்ளதினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் உதவி பொது துமுகாமையாளர் சுவாமி சுரக்ஷானந்த ஜீ மஹராஜ் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது
. இன்றைய நிகழ்வினை மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் சிவாநந்த பழைய மாணவர் சங்க தலைவருமான திரு. வ. வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றிருந்தது . இதில் சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் மற்றும் அன்பு நெறி அமைப்புகள் மற்றும் சிவாநந்த பழைய மாணவர் சங்கதினருக்குமிடையில் இணைப்பாளராக தொழில்பட்ட எந்திரி மங்களேஸ்வரன் அவர்களும் இறைவரி திணைக்கள உதவி பணிப்பாளரும் எமது பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும் பழைய மாணவர் சங்க கணக்கு பரிசோதகருமான திரு. த. குணராஜா, மண்முனை வடக்கு பிரதசே செயலக கிராம சேவையாளர்களின் நிர்வாக உத்தியோகத்தர் திரு. ராஜன், மண்முனை வடக்கு பிரதேச செயலக அனர்த்த முகாமைதுவ உத்தியோகத்தர்கள் அத்துடன் கல்லடி முகத்துவாரம், கல்லடி உப்போடை , ஞானசூரியம் சதுக்கம், புதுநகர், திமிலைதீவு போன்ற கிராம சேவையாளர்கள் பிரிவுகளின் கிராமசேவையாளர்களும், சிவாநந்த பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் மற்றும் சிவாநந்த பட்டமுன் மாணவர் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
























.jpg)
















