மதுபானசாலைகளை ஆரம்பிக்கும் எந்தவொரு நபரும் ஆரம்பக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும்.

 


நாட்டில் மதுபானசாலைகளை ஆரம்பிக்கும் எந்தவொரு நபரும் ஆரம்பக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதுவரை மதுபான கடைகள் திறப்பதற்கு அத்தகைய அடிப்படைக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

மதுவரி உரிமங்களை மிக வழமையான முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ரா பி 4 உரிமத்திற்கு அதிக தேவை இருப்பதால், அந்த உரிமத்தை வழங்குவதற்கு ஆரம்ப கட்டணமாக ஒரு கோடி ரூபாய் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.