(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம், மகுடம் கலை இலக்கிய வட்டம், கதிரவன் கலைக் கழகம், "கா" இலக்கிய அமைப்பு, அனாமிகா பண்பாட்டு மையம் மற்றும் தென்றல் இலக்கிய இதழ் ஆகியன இணைந்து நடாத்தும் அமரர் பேராசிரியர் செ. யோகராசா மற்றும் அமரர் வெ. தவராசா (கவிஞர் ராஜாத்தி) ஆகியோரை நினைவு கூரும் நினைவிடை தோய்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு தமிழ்ச் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெறுகிறது.
மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் வி.றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மகுடம் வி.மைக்கல் கொலின் வரவேற்புரை நிகழ்த்துவார்.
இதன்போது அமரர்களான பேராசிரியர் செ.யோகராசா மற்றும் வெ.தவராசா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, அகவணக்கமும் இடம்பெறவுள்ளது.
அத்தோடு நினைவுப் பேருரைகளை அமரர் பேராசிரியர் செ.யோகராசா தொடர்பாக கவிஞர் ஏ.பீர்முகமதுவும், கவிஞர் வெ.தவராசா தொடர்பாக மட்டக்களப்பு தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் மு.கணேசராஜாவும் நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்வில் கவிதாஞ்சலியினை கதிரவன் தங்கராசா இன்பராசாவும், நன்றியுரையினை எழுத்தாளர் ச.மணிசேகரனும் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)




