பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதம் நடைபெறவுள்ளது

 


பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்நிலை காப்புச்  சட்டமூலம் மீதான விவாதம், பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23), புதன்கிழமை (24) நடைபெறவுள்ளது. விவாதத்துக்கு பின்னர், அந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. 

இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ள வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சட்டமூலத்தை ஆராயும் போது பல திருத்தங்களை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சட்டமூலத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், முதலாவது வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.