மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணி உரிமம் வழங்கும் நிகழ்வு

 

















 

  வரதன்

 ஜனாதிபதியின் பணிபுரைக்கமைவாக கிழக்கு மாகாணத்தில் 20 லட்சம் காணித்துண்டுகளை காணி உரிமம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக  மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் காணி உரிமம் வழங்கும் நிகழ்வு
அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பின்தங்கிய பிரதேச மக்களின்  வாழ்வாதாரத்தினை கட்டி எழுப்பும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது .

ஜனாதிபதியின் பணிபுரைக் கமைவாக கிழக்கு மாகாணத்தில் 20 லட்சம் காணித்துண்டுகளை காணி உரிமம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் நீண்ட காலமாக அரச காணிகளில் குடியிருந்து அவற்றை பராமரிப்பு செய்ததன் காரணமாக அவர்களுக்கு காணி உரிமம் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.


 மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 28 பேருக்கு முதல் கட்டமாக வழங்கும் நிகழ்வு மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் ரோஜினி விவேகானந்த ராஜா தலைமையில் நேற்று மாலை ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணி உரிமம் ஆவணத்தை வழங்கி வைத்தார் இந்நிகழ்விற்கு முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் மற்றும் இப்பிரதேச செயலக முன்னாள் பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்யானந்தி  மற்றும் பிரதேச செயலக காணி  பிரிவு உயர் அதிகாரிகள் பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.