9ம் வகுப்பு மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


பாடசாலையில் உள்ள விடுதியில் தங்கி கற்றல் செயற்பாட்டை மேற்கொண்டு வந்த 9ம் வகுப்பு மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம்இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள அரச பாடசாலை விடுதியில் தங்கி சிறுமி 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அண்மையில் சிறுமி வயிற்று வலியால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார். உடனடியாக அவரை சிக்பள்ளாபூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 அப்போது சிறுமி முழுமாத கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலியால் துடிப்பதாகவும் டொக்டர்கள் கூறியது விடுதி நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.