இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் நான்காம் திகதி 3மணிக்கு நடைபெறவுள்ள சுதந்திர தின விழா தொடர்பான முன்னோட்ட கூட்டம் ஆளுநர் சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.
கூட்டத்தின் பின்னர் மட்டக்களப்பு வெபர் அரங்கு கல்லடி பாலம் உள்ளிட்ட இடங்களையும் ஆளுநர் தலைமையிலான குழு பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.