நாட்டில் கடந்த ஐந்து தினங்களுக்குள் மரக்கறிகளின் விலை 40 தொடக்கம் 54 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சந்தையில் மீனின் விலை குறைவடைந்ததால் மக்கள் காய்கறிகளை உண்பதில்லை அதனால் மரக்கறிகளின் விலை 40 தொடக்கம் 54 வீதம் வரை
குறைந்துள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டி உள்ளார்.





