கடந்த ஆண்டு போதைப் பொருள் தொடர்பில் கடற்படையினரால் 343 சந்தேக நபர்கள் கைது.

 


இலங்கை கடற்படையினரால் கடந்த ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 343 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 715 கிலோ ஹெரோயின், 3711 கிலோ கேரள கஞ்சா, 50 கிலோ உள்நாட்டு கஞ்சா, 140 கிலோ அஷீஸ், 11 கிலோ ஐஸ் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு, 92 ஆயிரத்து 572 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 18 உள்நாட்டு மீன்பிடி படகுகளுடன் 187 சந்தேக நபர்களும், ஈரான் படகுடன் 5 ஈரான் பிரஜைகளும், பாக்கிஸ்தான் பிரஜைகள் மூவரும், இரு இந்திய படகுகளுடன் 6 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.