காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மட்டக்களப்பு, பொத்துவில், திருகோணமலை மாவட்டங்களின் மழை

 


நாட்டின் அடுத்த வாரம் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மட்டக்களப்பு, பொத்துவில், திருகோணமலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் எதிர்வரும் 28 ஆம் திகதியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என  வளிமண்டவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் மழைக்கான சாத்திய கூறுகள் குறைவாகவே உள்ளன என திணைக்களம் தெரிவித்துள்ளது.