நாட்டில் நேற்று மாலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 955 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கடந்த 22 நாட்களுக்குள் யுக்திய சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,475 ஆக அதிகரித்துள்ளது.
1,473 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.





