மட்டக்களப்பில் புதி(ர்) யீட்டு விழா-2024






































(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு மாநகரசபை பொதுநூலகமும், மட்டக்களப்பு மாவட்டப் பண்பாட்டலுவலகமும், ஸ்ரீ கோட்டடிப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையும், மட்டக்களப்புத் தமிழ் விவசாய சமூகமும், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையும் இணைந்து நடத்திய புதி(ர்) யீட்டு விழா மட்டக்களப்பு பொதுநூலக வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை (25) இடம்பெற்றது.

இதன்போது பொதுநூலக வளாகத்திலிருந்து புதிர் ஐந்து அமைப்புக்களும் இணைந்து புளியந்தீவு கோட்டடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் விஷேட பூசை நிகழ்த்தப்பட்டு, ஆலயத்திற்கு வருகை தந்தோருக்குப் புதிர் கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொதுநூலகத்தில் மாவட்ட கலாசார இணைப்பாளர் தங்கராசா மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற விஷேட நிகழ்வில், சைவப் புலவர் விஜயலெட்சுமி இராமச்சந்திரா ஞானசூரியம், பேராசிரியர் எஸ்.ஜெய்சங்கர், மட்டக்களப்பு பொதுநூலக நூலகர் த.சிவராணி, கல்லடி பேச்சியம்மன் ஆலயப் பூசகர் எஸ்.கிருஸ்ணகுமார், மட்டக்களப்புத் தமிழ் விவசாய சமூக ஸ்தாபகரும், பணிப்பாளருமான ஏ.ரமேஸ், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் திருமதி துஷ்யந்தி சத்தியஜித் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கலைகள் நிறுவக நுண்கலைத்துறை மாணவர்கள் புதிரெடுத்தலின் சிறப்பை உணர்த்தும் வகையிலான பாடல், கவிதை மற்றும் சொற்பொழிவுகளும் அரங்கேற்றப்பட்டது.