ஈரானில் நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 141 பேர் காயமடைந்துள்ளனர்.

 



ஈரானில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 141 பேர் காயமடைந்துள்ளனர். 

கெர்மான் பகுதியில் உள்ள ஈரானின் முன்னாள் தளபதி காசிம் சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன. 

காசிம் சுலைமானின் நினைவு நாளை அனுசரிக்க ஏராளமானோர் கூடியிருந்தபோது, குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.