மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா பாடசாலைக்கு முன்பாக விபத்து, 04பேர் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 



 













 (கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு நகரிலிருந்து  காத்தான்குடி நோக்கிப் பயணித்த கார் இன்று திங்கட்கிழமை (15) கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அவ்வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் அதில் பயணித்த நால்வர் படுகாயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் முச்சக்கரவண்டியில் மோதி, பின்னர் 02பாதுகாப்பு  கம்பங்களை உடைத்துக் கொண்டு, கட்டின் மேலே ஏறிக் கொண்டது. இக்காரில் அக்கா, தம்பி என இருவர் பயணித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.