இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் முட்டை, சீனி மற்றும் வெங்காயத்தின் விலையை குறைக்க அரசாங்கம் தலையிடாவிட்டால், பாண் தவிர்ந்த
பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பாண் தவிர்ந்த பேக்கரி பொருட்களின் விலை பத்து ரூபாவினாலும், கேக் கிலோ ஒன்றின் விலை நூறு ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.