(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய வருடாந்த ஒளிவிழா வியாழக்கிழமை (21) வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக புதுமுகத்துவாரம் இக்னேசியஸ் தேவாலய பங்குத் தந்தை வணபிதா ரி.லோரன்ஸும், சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் டினேஸ் கிறிஸ்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மமாணவர் படையணிப் பொறுப்பதிகாரி எஸ். நிலாம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது மாணவர்களின் ஆடல், பாடல், நத்தார் செய்தி, நத்தார் தாத்தாவின் வருகை எனப் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின. அத்தோடு மாணவர் மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்ஒளி விழாவில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.