யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னோடித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
பிரகாசமான ஒளி, அதிவேக ஒலி அலைகள் மற்றும் டிரோன் விமானங்கள் உள்ளிட்ட
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் இந்த
முன்னோடித் திட்டங்கள் அனுராதபுரம், புத்தளம், அம்பாறை மற்றும் யானை – மனித
மோதல்கள் அதிகம் காணப்படும் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்
அமைச்சர்
சுட்டிக்காட்டினார்.
யானை – மனித மோதல் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த சிறிய நாட்டிள் மக்கள் தொகையை போன்றே யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல்வேறு நீர்பாசான வேலைத்திட்டங்கள் யானைகளின்பாதைகளுக்கு இடையூறாக அமைந்துள்ளன.
மக்களின் விவசாயச் செயற்பாடுகளும் யானைகளின்
பாதைகளை பாதிக்கின்றன. மக்கள் வாழும் பகுதிகளுக்குள் யானைகள் நுழைவைத்
தடுப்பதற்கு அடுத்த வருடத்தில் ஆயிரம் கிலோ மீற்றர் யானை தடுப்பு வேலிகளை
அமைக்க எதிர்பார்க்கிறோம்.