பால் மற்றும் பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான நிகழ்வு இன்று மட்டக்களப்பில் ஆரம்பம்.

 





















































பால் மற்றும் பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்வாத வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (01) மட்டக்களப்பில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மட்டக்களப்பு தேவை நாடும் மகளிர் அமைப்பு ஆகியனஇணைந்து இந் நிகழ்வினை நடாத்தினர்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வன்முறையால் பாதிக்கப்பட்ட உடனடி தேவை வழங்குவதற்கான
பேண்தகு உதவி திட்டங்களை முற்படுத்தி பால் மற்றும் பால் நிலை சார் வன்முறைக்கு எதிராக செயல்வாத வாரத்தின் நிகழ்வாக இது
அமைந்திருந்தது.

மட்டக்களப்பு நகர் பேருந்துதரிப்பிடத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு வீதி நாடகத்தைத் தொடர்ந்து, விழிப்புணர்வு நடைபவனி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச
செயலகம் வரை சென்றது.

இதனைத் தொடர்ந்து  பிரதான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில், பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் தலைமையில்
இடம்பெற்றது.

இதன்போது "குடும்ப வன்முறையை தூண்டும் போதை பொருள் பாவனை தடுப்போம்", "மன உறுதிமிக்க சமூகத்தை கட்டியெழுப்புவோம்", "இல்லத்து வன்முறையை இல்லாதொழிப்போம்", "மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அமைப்போம்", "பெண்களுக்கான ஊதியத்தை முறையாக வழங்குவோம்", "பெண்களுக்கு எதிரான பாலியல்
சுரண்டலை இல்லாது ஒழிப்போம்", "தீர்மானம் எடுக்கும் துறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வோம்" எனும் விடயதானங்களை உள்ளடக்கியதாக இந் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் புளோரன்ஸ் பாரதி கென்னடி ,தேவை நாடும் மகளிர் அமைப்பின் பணிப்பாளர்
சங்கீதா, மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்களான சியாவுள் ஹக், இலட்சனியா பிரசாந்தன், பிரதேச செயலக கணக்காளர், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், மகளிர் சங்கங்கள், மாணவர்கள்
எனப் பலர் கலந்து கொண்டனர்.