தனியார் கல்வி நிலையத்திற்கு தாயுடன் சென்ற மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் .

 


தனியார் கல்வி நிலையத்திற்கு தாயுடன் சென்ற மாணவி ஒருவர், அவரது காதலன் என கூறிக்கொண்ட இளைஞன் ஒருவனால் தாயை தாக்கி மாணவியை கடத்தி சென்றதாக முறைப்பாடு செய்துள்ளதாக மத்துகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹொரணை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி, மத்துகம பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ​​முச்சக்கரவண்டியில் மற்றுமொரு நபருடன் வந்த சந்தேக நபர் மாணவியை கையால் இழுத்து முச்சக்கர வண்டி உள்ளே அழைத்துச் சென்றதாக தாய் காவல் நிலையத்தில் தெரிவித்தார்.