(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி ஜஸ்டினா யுலேகா முரளிதரன் இன்று திங்கட்கிழமை (18) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்
தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப் பேற்றுக் கொண்டார்.
முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி கலாமதி பத்மராஜா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய மாவட்ட அரசாங்க அதிபருக்கான வெற்றிடத்திற்கு அரசாங்கம் இலங்கை நிர்வாக சேவை தரத்தின் விசேட தரத்தையுடைய ஒரு சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான திருமதி ஜஸ்டினா யுலேகா முரளிதரனை 2023.12.13-அன்று நியமித்திருந்தது
அந்த வகையில் இன்றைய தினம் புதிய அரசாங்க அதிபரின் குடும்ப உறவினர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், ஏனைய திணைக்களங்களின் உயரதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.