போதையற்ற வீட்டையும் நாட்டையும் உருவாக்க வாரீர்’ எனும் தொனிப் பொருளில், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு,
மட்டக்களப்பு மதுவரி திணைக்களத்தினால் விழிப்புணர்வு செயலமர்வு நடாத்தப்பட்டது.
போதையற்ற நாடே சௌபாக்கியமான தேசம் எனும் கருப்பொருளை மையப்படுத்தி இலங்கை மதுவரித்திணைக்களம் பல்வேறு
விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையிலேயே மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலும் விழிப்புணர்வு செயலமர்வு நடாத்தப்பட்டது.
கிழக்கு
மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் ச.தங்கராஜா, மட்டக்களப்பு மதுவரி
அத்தியட்சகர் நியுட்டன் அவுஸ்கோன், மட்டக்களப்பு மதுவரி பொறுப்பதிகாரி
செல்வக்குமார் ஆகியோரின் பங்குற்றுதலுடன், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வின்
வளவளாராக டேன் சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.