பாடசாலை மாணவியை வைத்து ஆபாச திரைப்படம் எடுத்த இரண்டு பாடசாலை மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பலாத்காரம் செய்து, அக்காட்சிகளை ஆபாசமான திரைப்படங்களாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பாக இரண்டு பாடசாலை மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டியை சேர்ந்த இரண்டு பாடசாலை மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரும் அவரது தாயும் கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் படி, சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.