மூன்று மாவட்டங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு பயிற்சி நிலையம் .

 


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சொந்தமான பயிற்சி நிலையங்களை யாழ்ப்பாணம், அம்பாறை மாவட்டங்களிலும் ஹோமாகமயிலும் நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, அவர்கள் செல்கின்ற நாடுகளுக்கு ஏற்றவாறான, துரிதமான விசேட பயிற்சி வேலைத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் நடத்தப்படுகின்றது.