சுமார் 95 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு இலக்காகி மற்றுமொரு பலஸ்தீன பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் படையினரால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலின் போது வீட்டிலிருந்த பலஸ்தீனியப் பத்திரிகையாளரான ஹனீன் அல் கஸ்தானும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் துவங்கிய காலத்திலிருந்து இதுவரை சுமார் 95 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.