தத்தெடுத்த 5 வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட விரிவுரையாளர் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை .

 


 

தத்தெடுத்து வளர்ப்பதற்கு  அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் 5 வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த சந்தேகத்தின் பேரில் ருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட விரிவுரையாளர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

கம்புருபிட்டியவில் உள்ள பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குழந்தையொன்று வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி அழுவதாக மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பந்துல வீரசிங்கவிற்கு வழங்கிய தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி திருமதி வருணி கேஷலா போகஹவத்த உள்ளிட்ட குழுவினர் கம்புருபிட்டிய உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.

தாக்குதல்களால் அவரது உடல் ஏற்கெனவே நீல நிறத்தில் இருந்ததாகவும், மூக்கு, உதடுகள், அண்ணம் போன்றவை காயம் அடைந்ததாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.