முன்னால் அரசாங்க அதிபர்களான மா.உதயகுமார், கே.கருணாகரன் மற்றும் திருமதி கலாமதி பத்மராஜா உள்ளிட்ட பதிவியுயர்வு, இடமாற்றம் மற்றும் ஓய்வுபெற்றச் சென்ற அனைத்து உத்தியோகத்தர்களும் வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து
மங்கள விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வானது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து முன்னால் கடைமையாற்றிய மாவட்ட செயலாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக உதவியலாளர்கள், வாகன சாரதிகள் என அனைத்து துறைசார்ந்தும் சிறப்பு சேவையினை பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன் சிறார்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் பல விதமான விநேத விளையாட்டுகள் நடாத்தப்பட்டு அதிதிகளினால் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உத்தியோகத்தர்களினால் இசை நிகழ்ச்சி நடாத்தப்பட்டதுடன், நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.