பாடசாலை மாணவிகளை மகிழ்விக்கும் முகமாக பாடசாலை பிரதான மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி
நித்தாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு அதிதியாக கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை, அருட்தந்தை
ஏ.தேவதாசன் மற்றும் வடக்கு கிழக்கு மெதடிஸ்த திருச்சபையின் கே. ஆர் அருள்ராஜா என்போர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது கற்றல் மற்றும்
இணைப்பாட விதான செயற்பாடுகளில் சாதனைகள் படைத்த மாணவர்கள் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முன்பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அதனைத்
தொடர்ந்து இயேசு கிறிஸ்துவின் தேவமகிமையையும் இறையாட்சியையும்
வெளிப்படுத்தும் கரோல் இன்னிசை கீதங்களும், நடனம், கதை, போன்ற கலை
நிகழ்வுகளும் மாணவிகளால் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.