சந்திரோதயம் கலை இலக்கியப் பெருமன்றத்தினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் "மலையகம் 200"










(கல்லடி செய்தியாளர்)

சந்திரோதயம் கலை இலக்கியப் பெருமன்றத்தினரின் ஏற்பாட்டில் "மலையகம் 200" நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மட்டக்களப்பு பொது நூலகத்தின் பேராசிரியர் செ.யோகராசா அரங்கில் இடம்பெற்றது.

கலாநிதி உருத்திரமூர்த்தி யுவராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தொடக்கவுரையினை சந்திரோதயம் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் சந்திரசேகரன் மணிசேகரமும், பிரதான உரையினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கலை இலக்கிய மற்றும் அரசியல் செயற்பாட்டாளருமான ம.திலகராஜூம், சிறப்புரைகளை கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், ஈரோஸ் ஜனநாயக முன்னணிச் செயலாளர் நாயகம் ஜீவன் இராஜேந்திரன் உட்பட பல சமூக செயற்பாட்டாளர்கள் ஆற்றினர்.


இதன்போது அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.