வற் அதிகரித்தால் பணவீக்கம் 2 வீதத்தால் அதிகரிக்கும்.

 


வற் அதிகரித்தால் பணவீக்கம் 2 வீதத்தால் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறினார்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கிக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வரிக் கொள்கையை மாற்றாவிட்டால் எதிர்பார்க்கப்படும் அரச வருமானத்தை ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டிருக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.