கடந்த 2014 முதல், 14 நாடுகளின் உயரிய விருதுகளை, பிரதமர் மோடி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதையும் பெற்றுள்ளதோடு, பிரதமராக பதவியேற்றது முதல், இதுவரை, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, மாலத்தீவு, பஹ்ரைன், அமெரிக்கா, பூட்டான், பிஜி, எகிப்து, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.