நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் பதுளை விஹாரமஹாதேவி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி W.M.துலினி சாந்தினி என்ற மாணவி 198 புள்ளிகளைப் பெற்று நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பதுளை ஸ்பிரிங்வேலி வீதியை வசிப்பிடமாகக் கொண்ட துலினி சாந்தினியின், தாயார் பொறியியலாளர் மற்றும் தந்தை வர்த்தகராவார்.
“இந்த வெற்றியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நன்றாகப் படித்து 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்று நினைத்தேன் என்று துலினி கூறினார்.