எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்குமா ?

 


எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 420 ரூபாவை தாண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோலுக்கு VAT விதிக்கப்படும் என ஷெஹான் சேமசிங்க சபையில் தெரிவித்தார்.