ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் சிறுதானிய விளைச்சல் தொடர்பான விவசாயிகளுக்கான கருத்தமர்வு .

 

 

 

















 

2023.11.25 வெள்ளிக்கிழமை ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் சிறுதானிய விளைச்சல்    தொடர்பான விவசாயிகளுக்கான கருத்தமர்வானது பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆறுமுகம்
சுதாகரன் தலமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வினை இளம் விவசாயியும் பொறியியளாளருமான   நிரோசன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.  இதன் போது இப்பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட 
30 விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கருத்தமர்வின் நோக்கமானது தெரிவு செய்யப்பட்ட    விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர்ச்செய்கை தொடர்பான விளக்கமளிக்கப்பட்டதுடன்
 சிறுதானியம்    உட்கொள்வதினால் ஏற்படும் நன்மைகள் சிறுதானிய பயிர் பராமரிப்பு மற்றும் நீர்பாய்ச்சல்    தொடர்பான விளக்கமளிக்கப்பட்டதுடன் இச்சந்தர்ப்பங்களில் ஏற்படும் சவால்களுக்கு எவ்வாறு    முகம்கொடுக்க வேண்டும் என்பதனையும் நிரோசன் அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.   சிறுதானியங்களான சாமை, தினை, பனிவரகு, கம்பு மற்றும் குரக்கன்  என்பன முதற்கட்டமாக   விளைச்சலுக்கு தெரிவுசெய்யப்பட்டன.. இக்கருத்தமர்வானது ஆணிவேர் உற்பத்திகள் சிறுதானிய    உணவகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது   குறிப்பிடத்தக்கது    . இந் நிகழ்வில் #ஆணிவேர் உற்பத்திகள்# இன்  இணை ஸ்தாபகர்களான திருமதி.சுஜிக்கா ஜனகன், திருமதி.விஜயபரணி ஜயசுதன் மற்றும் பிரதேச   செயலக திட்டமிடல் பிரிவு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.