போலியான கனேடிய விசாவுடன் கனடா செல்ல முயன்ற நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மெல்சிரிபுர, மதஹபொலவைச் சேர்ந்த 34 வயதுடைய பயணி, டுபாய் ஊடாக கனடா செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக இன்று மாலை விமான நிலையத்திற்கு வந்ததாக குடிவரவு வட்டாரங்கள் தெரிவித்தன.
பயணியின் உண்மையான இலங்கை கடவுச்சீட்டில் ஒட்டப்பட்டிருந்த விசா போலியானது என குடியகல்வு துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவு விசேட சோதனையின் மூலம் கண்டறிந்துள்ளது.





