மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூரில் சூர சம்காரம்!



































(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை (18) மாலை வங்கக் கடலோரத்தில் சூரசம்ஹாரம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இதன்போது சூரபத்மன் பல்வேறு வடிவங்களை எடுத்தான். அவற்றையெல்லாம் முருகப் பெருமான் எதிர்கொண்டு அழித்தார்.

இவ்வரிய காட்சியினைக் காண மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.