மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதற் தடவையாக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளியினை பெற்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கார்த்தீபன் தீபிஷன் என்ற மாணவனே 184 புள்ளிகளை பெற்று இவ்வாறு கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.





