இஸ்ரேலிய புலனாய்வு பிரிவு அண்மைக்காலத்தில் எதிர்க்கொண்ட இரண்டாவது, மிகப்பெரிய தோல்வி?

 


காசாவிலுள்ள மிகப்பெரிய வைத்தியசாலை என கூறப்படுகின்ற அல்ஷிபா வைத்தியசாலை விவகாரம் என்பது, இஸ்ரேலிய புலனாய்வு பிரிவு அண்மைக்காலத்தில் எதிர்க்கொண்ட இரண்டாவது, மிகப்பெரிய தோல்வி என்றே கூற வேண்டியுள்ளது.

ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பாரிய ஒருங்கிணைந்த அதிரடி தாக்குதலை மேற்கொள்ளுவார்கள் என்பதை கவனிக்க தவறியிருந்ததுதான், இஸ்ரேலிய அண்மைக்கால வரலாற்றில் அதனது புலனாய்வு பிரிவு பெற்ற மிகப்பெரிய தோல்வி என்று கூறப்படுகிறது.

அதேபோன்று, காசாவின் அல்ஷிபா வைத்தியசாலையில் ஹமாஸின் கட்டளை தளம் இருப்பதாக, இஸ்ரேலிய புலனாய்வு பிரிவுகள் கூறி வந்த போதும், அப்படி எதுவுமே அவ்வைத்தியசாலையில் கண்டுப்பிடிக்க முடியாமையானது இஸ்ரேலிய புலனாய்வு பிரிவுகள் அண்மைக்காலமாக முகங்கொடுத்துவரும் மிகப்பெரிய தோல்வி எனலாம்.