எட்டுமாத கர்ப்பிணித்தாயும் பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள துயர சம்பவம் திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

 


இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கர்ப்பிணித்தாயும் பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள துயர சம்பவம்  திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

மூதூர், இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத இளம் கர்ப்பிணித்தாய் ஒருவர் மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஸ்கான் பரிசோதனையை மேற்கொண்டபோது ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்ததுடன் அவரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தாய் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டபோதிலும் வழியில் உயர் குருதி அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்துள்ளார்.

பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டபோதிலும் குறித்த தாயும் உயிரிழந்ததுடன் ஒரு குழந்தை மட்டும் காப்பாற்றப்பட்டு விசேட சிசு பராமரிப்புப்பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.