நேற்றைய தினம் 2023.11.26. முழுமதி நாளில் மட்டக்களப்பு சித்தாண்டி "யோகர் சுவாமிகள் சைவமகளிர் இல்லம்" தரம் 9 முதல் உயர்கல்வி கல்வி மாணவிகளுக்கு மு.ப.10- பி.ப 1.30 வரை "வெற்றிக்கான மென் திறன்கள்" (Soft Skills for Success-S3) தொழில்வாண்மை சுய ஊக்குவிப்புப் பயிற்சி வழங்கப்பட்டது
.இதனை KTP Consultancy & Training நிறுவனத்தின் நிறுவுனரும் நாடளாவிய பயிற்சி வளவாளருமாகிய Dr.K.T.பிரஷாந்தன் அவர்கள் வழங்கினார்.
இது அவரது 581வது தொழின்முறைப் பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது
இதனை முழு இலவசமாக தனிநபர் சமூகப் பொறுப்புணர்வு (Personal Social Responsibility-PSR) நடவடிக்கையாக வழங்கியிருந்தார்.
கற்றல் மற்றும் வாழ்க்கைக்குப் பயனுறுதியான மனப்பாங்கு மாற்றம், மனநிலை , கற்றல் நுட்பங்கள், தன்னம்பிக்கை , நற்பிரஜைகளாக மிளிர்தல், சமூகப் பொறுப்புணர்வு, பரீட்சை நுட்பங்கள் , வாழ்நாள் கற்றல் ஆகிய விடயங்கள் பங்கேற்பு அணுகுமுறையில் இன்றைய மாணவிகளுக்கு ஏற்ற விதத்தில் வழங்கப்பட்டமைக்கு இல்லத் தலைவர் திரு.அருணாசலம் விநாயகமூர்த்தி அவர்களும் இல்ல மாணவிகளும் நன்றி தெரிவித்து மீளவும் அடிக்கடி இத்தகு அமர்வுகளை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

.jpg)
.jpg)




